அம்பாறையில் ஆழ வாழ்தலின் கல்விப்பணிகள்

“ஆள வாழ்தல்” (Deep Global) அமைப்பு மேற்கொண்டு வருகின்ற கல்விப் பணியின் ஓர் அம்சமாக இம்முறை (2023) க.பொ. த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள அம்பாறை மாவட்ட திருக்கோவில் கல்வி வலயத்தின் கஷ்ட பிரதேச பாடசாலைகளான தேவகிராமம் (அளிக்கம்பை) புனித சேவியர் வித்தியாலயம், கண்ணகி கிராமம் கண்ணகி வித்தியாலயம், பனங்காடு பாசுபதேஸ்வரா வித்தியாலயம், ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 121 மாணவர்களுக்கான தமிழ், கணிதம், வரலாறு, ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்குரிய மாதிரி வினாப்பத்திரங்கள் இன்று (22.05.2023) அந்தந்த பாடசாலை அதிபர்களிடம் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.