இந்த வருடம் க.பொ.த(உ/த) பிரிவு மாணவர்களுக்கான பரீட்சைக்கு தயார்ப்படுத்தலுக்கான முன்னோடி செயலமர்வானது Deep Global நிறுவனத்தின் அனுசரணையுடன் யா/உடுத்துறை மகா வித்தியாலயத்தில் 05-07-2018 தொடக்கம் 14-07-2018 வரையான காலப்பகுதியில் இடம்பெற்றது.
இச் செயலமர்வில் மருதங்கேணிக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளான யா/உடுத்துறை ம.வி, யா/ஆழியவளை சி.சி.த.க.வி, யா/அம்பன் அ.மி.த.க.வி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ், இந்து நாகரீகம், வரலாறு, இணைந்த கணிதம், இரசாயனவியல், பெளதீகவியல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்(ICT) ஆகிய பாடங்களுக்கான செயலமர்வுகள் யாழ் மாவட்டத்திலுள்ள பிரபலமான வளவாளர்களால் நடத்தப்பட்டது.